×

லிப்ட் கேட்பதுபோல் நடித்து பைக், பணம் திருடிய வாலிபர் கைது வந்தவாசி அருகே நூதன முறையில்

வந்தவாசி, டிச.29: வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில், கோயிலுக்கு சென்று திரும்பிய துணிக்கடை ஊழியரிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து நூதனமுறையில் பைக், பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி அடுத்த கோவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(39). இவர் வந்தவாசியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள பாண்டுரங்கன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் பைக்கில் கோவனந்தல் கிராமத்திற்கு திரும்பி உள்ளார். அப்போது காஞ்சிபுரம் நெடுஞ்சாலை தாழம்பள்ளம் கூட்டுச்சாலை அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் வந்தவாசி செல்ல லிப்ட் கேட்டு நிறுத்தியுள்ளார். பின்னர் அவரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் வந்ததுள்ளார். அதில் பைக்கில் இருட்டான பகுதிக்கு வந்தபோது பைக்கில் பின்னர் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பைக்கை நிறுத்த சொல்லி உள்ளார்.

பின்னர், பெருமாளிடம் கையில் இருக்கும் பணத்தை கொடு இல்லையென்றால் உன்னை குத்தி விடுவேன் என மிரட்டினாராம். இதனை தொடர்ந்து பாக்கெட்டில் இருந்த ₹2.200 பணத்தை பறித்துக்கொண்டு பைக்கையும் பிடுங்கி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் என்ன செய்வது என தெரியாமல் தன்னுடன் பணிபரியும் சக ஊழியர் உதவியுடன் வந்தவாசி வந்துள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்த வந்தவாசி வடக்கு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதி மற்றும் வந்தவாசி நோக்கி செல்லும் பகுதி, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.

அதில் பெருமாள் கூறிய பைக் உடன் சென்ற வாலிபர் தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் பூபாலன் (24) என தெரிய வந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூபாலன் புலிவாய் செல்லும் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் பதுங்கினார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், கோவிந்தராஜிலு, ஏகாம்பரம் மற்றும் போலீசார் பூபாலனை சுற்றி வளைத்து மடக்கி கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து பைக்கையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பூபாலனை வந்தவாசி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னாள் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

The post லிப்ட் கேட்பதுபோல் நடித்து பைக், பணம் திருடிய வாலிபர் கைது வந்தவாசி அருகே நூதன முறையில் appeared first on Dinakaran.

Tags : Nudana ,Vandavasi ,Tennankur ,Perumal ,Govanandal village ,Dinakaran ,
× RELATED ரூ.2 ஆயிரத்திற்காக கணவனை கொன்று...