×

ஒரே நாளில் புதிதாக 702 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 702 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள், தீவிர கண்காணிப்பு உள்ளிட்டவை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு மூன்றிலக்க எண்ணிக்கையில் இருந்து வருகின்றது. கடந்த 5ம் தேதி வரை இரட்டை இலக்க எண்ணிக்கையில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. புதிய வகை வைரசான ஜேஎன்.1 பாதிப்பு மற்றும் குளிர்காலம் தொடங்கிய பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.

ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 2 பேரும், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் தலா ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கையானது 4,097ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த பெரும்பாலானோர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகின்றது. எனினும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

The post ஒரே நாளில் புதிதாக 702 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி