×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி, இளையராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் காலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், சினிமா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். விஜயகாந்த் வீட்டிலும் கட்சி அலுவலகத்திலும் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் விஜயகாந்த் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்துக்கு கே.பாலகிருஷ்ணன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி, இளையராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Phamaka ,Anbumani ,Ilayaraja ,Temudika ,Vijayakanth ,Chennai ,Paramaka ,Demutika ,Demutika Institute ,Vijayakant ,Miad Hospital ,Dinakaran ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...