×

மகள், மருமகள் போட்டியால் கலகலத்து போயிருக்கும் இலை தலைமை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகர மாவட்ட நிர்வாகம் தூங்கும் வரை கல்லா கட்ட ஆசைப்படும் நபரை பற்றி சொல்லேன் பார்ப்போம்…’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர மாவட்டத்தின் ‘குன்றத்து’ யூனியன் அதிகாரியானவர் பொறுப்பேற்றது முதல் அங்கு பிரச்னையோ பிரச்னையாம். இவர் இதே இடத்தில் ஏற்கனவே அதிகாரியாக இருந்தவராம். ‘இலைக்கட்சி ஆட்சி காலத்தில் கல்லா கட்டியது போல இப்போதும் கட்ட வேண்டும்; அதில் தனக்கு உரிய பங்கு சிந்தாமல் சிதறாமல் வர வேண்டும் என்று என்று தன் ஊழியர்களிடம் கறாராக சொல்லிவிட்டாராம். பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இவரது அடாவடியைப் பார்த்து பொதுமக்கள் பட்ட பெயர் வைக்கும் அளவுக்கு போயிட்டாங்க.. அப்புறம், கிராம தலைவர்களிடமும் பட்டியல் கொடுத்து கல்லா கட்டி வருகிறாராம். இதில், சில கிராமத்தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு புகார்களை எடுத்துச் சென்றுள்ளனர். அப்படியும் கலெக்‌ஷன் தொல்லை ஓயாததால் யூனியன் அலுவலக வளாகத்திலேயே வாக்குவாதம் வரை சென்றுவிட்டதாம்… இதனால அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் சேர்ந்து மாவட்ட உயரதிகாரியை சந்தித்து யூனியன் அதிகாரியை தூக்க ஸ்கெட் போட்டு வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மகளா… மருமகளா என்ற போட்டியில் இலை கட்சி தலைமை தடுமாறி வருகிறதாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் வாங்க இப்போதே இலை கட்சியில் முட்டல், மோதல்… துண்டு போட்டு இடம் பிடிப்பது… வரிசையில் குடம் வைத்து தண்ணீர் பிடிப்பதுபோல இலை கட்சியின் நிலைமை மாறிவிட்டதாக தூங்கா மாநகர இலை கட்சி நிர்வாகிகள் திணறி வர்றாங்க. மதுரை மாநகராட்சி தேர்தலில் மேயர் சீட்டுக்கு இப்போதே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மேயர் பதவியை பிடிக்க இலை கட்சியில் ெதர்மோகோல் மாஜி மந்திரியும், ஏற்கனவே கருப்பு கவுன் அணிந்த செல்லமானவருக்கும் இடையே கடும் போட்டியாம். என்னடா இவங்க தான் மக்கள் பிரதிநிதியாக இருக்காங்களே என்ற சந்தேகம் வருதில்ல… மேயர் சீட் கேட்பது இவர்களுக்காக இல்லையாம். தொர்மோகோல் மாஜி மந்திரி தனது இளையமகளுக்காக கேட்டு வாங்க முடிவு செய்துள்ளாராம். தன் பிடியில் தூங்கா மாநகரம் இருக்க வேண்டும்னு நினைக்கிறாராம். அதேபோல ஏற்கனவே மாநகர கவுன் அணிந்தவரோ, மேயர் பதவிக்கு எனது மருமகள் பொருத்தமானவர். அவருக்கு சீட் வாங்கி ஜெயிக்க வைச் தீருவேன்னு சொல்லி வருகிறாராம். இதற்காக, இரண்டு பேரும் சென்னை-மதுரை-சென்னை என்று ஏரில் பறந்தும், கார், ரயிலில் பாய்ந்து சென்றும் விவிஐபிக்களை பார்த்து சீட் கேட்டு வர்றாங்களாம். தங்களை நம்பிய தொண்டர்களுக்கு, நிர்வாகிகளுக்கு இதுபோல தண்ணீயாக பணத்தை செலவு செய்து பதவி வாங்கி தந்து இருப்பாங்களா… தங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி பாடுபடுகிறார்கள். எல்லாம் பதவி மோகம் என்று வசைபாடுகிறார்கள். அதை பற்றி கவலைப்படாமல் செல்லமானவரோ, ‘மாநகராட்சியில் உள்ள 28 வார்டுகள் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக தெர்மோகோல் இருந்து நிறையசம்பாதித்துவிட்டார். அவரால நான்கு தொகுதி அம்போவாச்சு. இவரால் மாநகர் பகுதியில் கட்சி வளர்க்க முடியாது. இனிமேலும், அவரது குடும்பத்துக்க பதவி கொடுக்க கூடாது’’ என கட்சி தலைமையிடம் போர்க்கொடி தூக்கினாராம். அதே நேரம், ‘ எனக்கு அமைச்சர் பதவி தவிர எந்த பதவியும் தரல. மேயர் பதவிக்கான சீட்டை எனக்கு ஒதுக்கவேண்டும்’ என்று தெர்மோகோல் கட்சி தலைமையிடம் மன்றாடுகிறாராம். தலைமையோ முடிவு எடுக்க தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கருணை, மனசாட்சியே இல்லாத மருத்துவரை யாரு வாட்டி எடுத்தது…’’ என்று கேட்டர் பீட்டர் மாமா. ‘‘ டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 6 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்நாள் கூட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது குறைதீர்நாள் கூட்டத்திற்கு வந்து இருந்த அரசு மருத்துவமனை ஆர்எம்ஓவிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊழியர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், ஆர்எம்ஓ எந்தவித ரெஸ்பான்ஸும் பண்ணாததால் அந்த பெண் கூட்ட அரங்கில் கண்ணீருடன் நின்றுள்ளார். அப்போது கூட்ட அரங்கிற்குள் நுழைந்த மாவட்ட உயரதிகாரி அழுது கொண்டிருந்த அந்த பெண்ணை அருகில் அழைத்து பேசியுள்ளார். உடனே அந்த பெண் தனது மகனின் மருத்துவ ரிப்போர்ட்டை காட்டி மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்ட போது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என புகாராக தெரிவித்தாராம். இதில் ஆத்திரமடைந்த உயரதிகாரி, கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த மருத்துவரை தனது இருக்கை அருகே அழைத்து நடந்ததை கேட்டுள்ளார். ஆனால், மருத்துவர் உயரதிகாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வெளியில் நடந்த வேறு ஒரு பிரச்னை குறித்து திசை திருப்ப முயன்றாராம்.. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற உயரதிகாரி, அந்த பிரச்னையை வெளியே பேசிக் கொள்ளுங்கள். ஏழை பெண் ஒருவர் மருத்துவ  சிகிச்சை குறித்து உதவியை நாடி வந்தால் அதற்கான ரெஸ்பான்ஸ் முதலில் பண்ணுங்கள். என் முன்னால் நிற்காதீர்கள்… வேறு மாவட்டத்திற்கு  டிரான்ஸ்பர் பண்ணி விடுவேன் என எச்சரிக்கையுடன் டோஸ் விட்டாராம். இதனால் ஆடிப்போன அந்த மருத்துவர் உயரதிகாரியிடம் எதுவும் கூறாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டாராம். கடந்த ஆட்சியில் எப்படி இருந்தார்களோ அதை போல் தான் ஆட்சி மாறியும் கருணை, மனாசாட்சி இல்லாமல் ஒரு சிலர் இருந்து வருகிறார்கள்.. உயரதிகாரி டோஸ் விட்டது தப்பு இல்லை என புகார் கொடுக்க வந்த மக்கள் பேசிக் கொண்டனர்…’’ என்றார் விக்கியானந்தா.   …

The post மகள், மருமகள் போட்டியால் கலகலத்து போயிருக்கும் இலை தலைமை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yili ,Doonga city ,
× RELATED இலை ஆட்சியில் மாஜி மந்திரியின்...