×

திரையுலகிலும், பொதுவாழ்விலும் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் விஜயகாந்த் : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர், அனைவராலும் அன்புடன் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டவருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு. விஜயகாந்த் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் மனம் வருந்துகிறேன். திரையுலகிலும், பொதுவாழ்விலும் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்கள் மற்றும் அவரது அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ் ! என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திரையுலகிலும், பொதுவாழ்விலும் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் விஜயகாந்த் : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Minister ,Thangam Tennarasu ,CHENNAI ,DMUDIK ,National Progressive Dravida ,Kazhagam ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!