×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஆளூர் ஷா நவாஸ் இரங்கல்..!!

பெங்களூரு: தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் விஜயகாந்த் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று டி.கே.சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மனத்தால் செழித்த மாண்பாளர், அனைத்து மக்களின் அன்பாளர் விஜயகாந்த் என்று விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். கொடுத்துச் சிவந்த பண்பாளர், கள்ளம் கபடம் இல்லா குணாளர், கலை உலகின் ஆற்றலாளர். நாடி வந்தோருக்கு ஓடி உதவியவர், நிலைத்த புகழுக்கு உரியவர் விஜயகாந்த் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஆளூர் ஷா நவாஸ் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,TK Shivakumar ,Shah Nawaz ,DMDK ,Vijayakanth ,Bengaluru ,DK Sivakumar ,DMV ,TK Sivakumar ,Dinakaran ,
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு