- ஆந்திரா
- சட்டமன்ற உறுப்பினர்
- அமெரிக்கா
- அமலாபுரம்
- டெக்சாஸ், அமெரிக்கா
- ஆந்திரப் பிரதேச கோனசீமா மாவட்டம்
- அமெரிக்கா
- தின மலர்
அமலாபுரம்: அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த கார் விபத்தில் ஆந்திர எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் பலியானார்கள். ஆந்திரமாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் நகரை சேர்ந்தவர் பி.வெங்கட சதிஷ்குமார். இவர் மும்மிடிவரம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஆவார். இவரது சித்தப்பா பி.நாகேஷ்வர் ராவ். இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நாகேஷ்வர் ராவ் அவரது குடும்பத்தை சேர்ந்த சீதா மகாலட்சுமி, நவீனா, கிருத்திக், நிஷிதா மற்றும் குடும்பத்தின் உறவினரான மற்றொரு நபர் ஆகியோர் அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள க்ளெபர்ன் நகரில் காரில் பயணம் செய்த போது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரில் இருந்த லோகேஷ் என்பவர் மட்டும் படுகாயத்துடன் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
The post அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் ஆந்திர எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் பலி appeared first on Dinakaran.