×

படுக்கை வசதி, 2ம் வகுப்புகளுக்கு அம்ரித் பாரத் ரயிலில் 17% வரை கட்டணம் அதிகம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்து முதல் அம்ரித் பாரத் ரயிலை நாளை மறுநாள் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதனையொட்டி, இதற்கான டிக்கெட் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அம்ரித் பாரத் ரயிலில் ஒரு கிலோ மீட்டர் முதல் 50 கி.மீ. வரை பயணிக்க முன்பதிவு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்காமல், ரூ.35 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் 2-ம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி உடன் கூடிய இருக்கைக்கான கட்டணம் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குளிர்சாதன இருக்கைக்கான கட்டணம் விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த இரண்டு வகுப்புகளுக்கான டிக்கெட் கட்டணம் மற்ற ரயில்களில் நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட 15 முதல் 17 சதவீதம் வரை கூடுதலாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post படுக்கை வசதி, 2ம் வகுப்புகளுக்கு அம்ரித் பாரத் ரயிலில் 17% வரை கட்டணம் அதிகம்: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Amrit Bharat ,New Delhi ,Modi ,Ayodhya ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு