×

பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா மீது வழக்குப்பதிவு

மைசூரு: மைசூர் தொகுதி பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா பேசும்போது, ‘‘முதல்வர் சித்தராமையாவை ‘‘சோமாரி சித்தா’’ (மந்தமான சித்தராமையா) என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மைசூரு கிராம காங்கிரஸ் தலைவர் பி.ஜே.விஜயகுமார், தலைமையில் ‘‘காங்கிரஸ் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமரசம் பேசிய போலீசார், எம்பி பிரதாப் சிம்ஹா மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அவதூறாக பேசியதாக. பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா மீது தேவராஜா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Pratap Simha ,Mysore ,Chief Minister Siddaramaiah ,Siddaramaiah'' ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...