×

தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு ஜேஎன்.1 கொரோனா பாதிப்பு: ஆய்வில் உறுதியானது

சென்னை: தமிழத்தை சேர்ந்த 4 பேருக்கு ஜேஎன்.1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019ல் முதல் முதலாக சீனாவில் கொரோனா தொற்று உருவானது. அதற்கு பிறகு கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என பல வகையான திரிபுகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவின. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கு பல வகை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் சமீபகாலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை கொரோனா தொற்று (ஜேஎன்.1 ) சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதற்கு பிறகு கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது.

ஆனால் முழு விவரம் தெரியவர சில நாட்கள் ஆகும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் திருச்சி, கோவை, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் நான்கு பேருக்கு இந்த புதிய தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது கொரோனா தொற்று உறுதி என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா ஜேஎன். 1 வகை கொரோனா பரவல் தொடங்கியுள்ளது.

The post தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு ஜேஎன்.1 கொரோனா பாதிப்பு: ஆய்வில் உறுதியானது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...