×

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை அமைத்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம்

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம்.சோமையா, மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமனமிக்கபட்டுள்ளனர். வீரர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளின் மேற்பார்வை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கவனிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் சில விளையாட்டு போட்டிகள் அறிவித்திருந்தனர். அதில் விதிமீறல்கள் நடைபெற்றதாக ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் புதிய நிர்வாகிகள் அமைப்பை இடைநீக்கம் செய்தது. மேலும் இந்த மல்யுத்த கூட்டமைப்பிற்கு தற்காலிக குழு அமைக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியிறுந்தது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னால் நிர்வாகிகள் இந்த கூட்டமைப்பில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த சூழலை கருத்தில் கொண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிவாகம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை அமைத்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம் appeared first on Dinakaran.

Tags : Indian Olympic Association ,Indian Wrestling Federation ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!