×

நடனமாடியபடியே பக்தர்களுக்கு காட்சியளித்த நடராஜர்.. சிதம்பரத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோலிவில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆந்த்ரா தரிசன் விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வா வா நடராஜா வந்துவிடு நடராஜா என்ற கோஷத்துடன் தேர் இழுத்து வந்தனர். விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

இதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிமுதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, நாளை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

திருவிழா ஏற்பாடுகளை கோயில்பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். நடனமாடியபடியே பக்தர்களுக்கு நடராஜர் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூருக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

 

The post நடனமாடியபடியே பக்தர்களுக்கு காட்சியளித்த நடராஜர்.. சிதம்பரத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்..!! appeared first on Dinakaran.

Tags : Nataraja ,Cuddalore ,Arudra darshan festival ,Chidambaram Nataraja Temple ,Cuddalore District ,Chidambaram ,Nataraja Koli ,Margazhi month ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...