×

மார்கழி திங்கள் அல்லவா!

மார்கழி மாதம் துவங்கினாலே சென்னையில் உள்ள அனைத்து சபாக்களிலும் இசை, நாடகம் மற்றும் நடன கச்சேரிகள் என நிரம்பி வழியும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் MDnD நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனரான கல்யாணசுந்தரம். MDnD என்பது ‘இசை, நடனம் மற்றும் நாடகத்தினை குறிக்கும். இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கான உலகளாவிய இணையத்தளமாக செயல்பட்டு வரும் இத்தளம், மார்கழி சங்கீத சீசன் குறித்து டிக்கெட்டுகள் பற்றிய விவரங்களை தங்களின் www.mdnd.in இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் சீசன் டிக்கெட்டுகள், தினசரி டிக்கெட்டுகள், சபாக்களில் செயல்படும் கேட்டீன் உணவுகளுக்கான என அனைத்து நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வாங்கலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்று இருப்பவர்கள், அரங்கிற்குள் நுழையும் போது, அதில் உள்ள QR குறியீடுகளை காண்பித்தாலே போதும். இந்த இணையத்தில் நாரதகான சபா, பாரத் உத்சவ், கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பிரம்ம ஞான சபா, ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், தமிழ் இசை சங்கம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, ரசிகப்ரியா ஃபைன் ஆர்ட்ஸ்…

மேலும் பல சபாக்களில் நடைபெறும் கச்சேரிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு டோக்கன்களை ஆன்லைன் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% தள்ளுபடி மற்றும் முன்னுரிமை இருக்கை வசதிகள் உண்டு. இந்த இணையத்தில் இசை, நடனம் அல்லது நாடகத்தை குறித்து பார்வையாளர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிடவும் செய்யலாம். அவை வாட்ஸப் மற்றும் மற்ற சமூக ஊடகங்களிலும் எளிதில் பகிரும் வசதியினை இந்த இணையம் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார் கல்யாணசுந்தரம்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post மார்கழி திங்கள் அல்லவா! appeared first on Dinakaran.

Tags : Margazhi ,Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...