×

கடையம் அருகே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு

கடையம் :கடையம் அருகே பாப்பான்குளம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். கடந்த 17, 18ம் தேதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் நெல்ைல, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்த நிலையில் தென்காசி மாவட்டமும் பாதிப்புக்குள்ளாயின. தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாப்பான்குளம் பகுதியில் பயிரிட்டிருந்த விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.

இதில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. நேற்று பாதிப்படைந்த பயிர்களை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தனுஷ் குமார் எம்பி, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், கென்னடி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ்,

தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் அருள், கடையம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், ஆழ்வை பேரூர் செயலாளர் அழகேசன், செல்வராஜ், கணேசன் முருகன், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அழகு, லட்சுமணன்,மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், குற்றாலம் சுரேஷ், பேரூர் செயலாளர்கள் ஆழ்வார்குறிச்சி அழகேசன், குற்றாலம் குட்டி, இலஞ்சி முத்தையா, நிர்வாகி மாறன், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேர்மச்செல்வன், அற்புதராஜ், பொறுப்புக்குழு உறுப்பினர் அகமது ஈசாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கடையம் அருகே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR ,Ramachandran ,Kadayam ,Papankulam ,Dinakaran ,
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளரை...