×

இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும்: இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி சானக்கியாபுரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் உள்ளது. இங்கு இஸ்ரேல் நாட்டு தூதர், அதிகாரிகள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று மாலை சுமார் 5 மணியளவில் இஸ்ரேல் தூதரகத்தின் பின்புறத்தில் வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்ததாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெடிபொருள் வெடித்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ள போலீசார், இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலின் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்; 5 மணிக்கு பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்பு குழு டெல்லி போலீசாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இந்தியாவில் மக்கள் அதிகமாக கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரெஸ்டாரன்ட், ஓட்டல், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்தும் போன்ற அடையாளங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும்: இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Israelis ,India ,Israel Security Council ,Delhi ,Israel ,Security Council ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...