×

பேரளி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

 

பெரம்பலூர்,டிச.27: பேரளி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27ம்தேதி) மின் நிறுத்தம். பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (27ஆம் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பேரளிக்கு உட்பட்ட கிராமியப் பகுதிகளான பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி,ஒதியம், சிறுகுடல், அறுமடல், கீழப்புலியூர், கே. புதூர், எஸ்.குடிக்காடு, கல்பாடி, க.எறையூர், நெடு வாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பா பாளையம், செங்குணம் ஆகிய கிராமப் பகுதிக ளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த உடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பேரளி பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Parali ,Perambalur ,Barali ,Assistant Executive Engineer ,Muthamithselvan ,Pareli ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...