×

நாட்டு வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லிக்குப்பம், டிச. 27: நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேல்பட்டாம்பாக்கம் டேனிஷ் மிஷன் பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி விசாரித்தபோது அதில் இருந்த 2 பேர் தப்பினர். ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் நடுகாலனி முருகன் கோயில் தெருவை சேர்ந்த ரவி மகன் ராமச்சந்திரன் (20) என்பதும், தப்பியவர்கள் கேஎன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜேஷ் (24), பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தன் மகன் முகிலன் (25) என்பதும், புதுச்சேரி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை பி.என்.பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள செயல்படாத இ-சேவை மையத்தில் மறைத்து வைத்தது தெரிந்த. அதன்பேரில் போலீசார் 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து ராஜேஷ் (24) என்பவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் பிஎன் பாளையம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டு பயந்து ஓடி முட்புதரில் ஒளிந்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் நாட்டு வெடிகுண்டு சம்பவத்தில் தேடி வந்த முகிலன் என தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

The post நாட்டு வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Inspector ,Sinuvasan ,Melpatambakkam ,Danish Mission ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது