×

தமிழ்நாடு முழுவதும் 385 ஊராட்சி ஒன்றியங்களில் பிஎப்எம்எஸ் சர்வர் முடங்கியதால் செலவினங்களின் பில்கள் நிறுத்தி வைப்பு

கள்ளக்குறிச்சி, டிச. 27: தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 385 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பணி மேற்கொள்ளும் அரசு ஒப்பந்ததாரர்களின் பில்கள் மற்றும் அனைத்து செலவின பில்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்கனவே வங்கி காசோலையாக வழங்கி வந்தனர். தற்போது செலவினங்களுக்கு ஆன்லைன் சர்வர் மூலமாக பிஎப்எம்எஸ் என்ற படிவத்தின்படி செலவின தொகையை சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கையொப்பமிட்டு கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் ஊராட்சி ஒன்றியங்களில் செலவினங்களுக்கு பயன்படுத்தக்கூடிய பிஎப்எம்எஸ் சர்வர் விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 21 ம்தேதி முதல் சென்னை சைதாபேட்டையில் உள்ள டிஆர்டிஏ அலுவலகத்தில் நடைபெற்று வருவதால் சர்வர் அனைத்தும் கடந்த 6 நாட்களாகவே முடங்கியது. அரசு ஊழியர்களின் டிசம்பர் மாத சம்பளம் போடுவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக கடந்த 20ம் தேதிக்கு முன்பே சம்பள பில் சர்வர் மூலமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. செலவின கணக்குகளுக்கு பயன்படுத்த கூடிய பிஎப்எம்எஸ் சர்வர் விரிவாக்கம் பணி ஜன. 2 ம்தேதி வரை நடைபெறும். அதன்பிறகுதான் அனைத்து செலவின கணக்குகளுக்கு பிஎப்எம்எஸ் மூலம் அதற்கான செலவின தொகையை வழங்க இயலும். இதனால் செலவின கணக்குகளின் பில்கள் செயல்படுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறினர்.

The post தமிழ்நாடு முழுவதும் 385 ஊராட்சி ஒன்றியங்களில் பிஎப்எம்எஸ் சர்வர் முடங்கியதால் செலவினங்களின் பில்கள் நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Unions ,Tamil Nadu ,PFMS ,Kallakurichi ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...