- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருமாவளவன்
- பாஜக
- சென்னை
- விசி
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- செயலகம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், விசிக சார்பில் நடைபெற இருக்கும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து திருமாவளவன் அளித்த பேட்டி: விசிக சார்பில் டிசம்பர் 29ல் நடைபெற இருந்த ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ தென்மாவட்டங்களில் புயல், மழை பாதிப்பு காரணமாக ஜனவரி 26ல் திருச்சியில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதில் முதல்வர் சிறப்புரையாற்ற அழைப்பு விடுத்தோம். அவர் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
புயல் மற்றும் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவும், நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பின்பற்றவும் கோரி 29ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பாஜ தலைவர்கள் தமிழ்நாட்டு மக்கள் துயரத்தை அவர்களது அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மக்கள் துன்பத்தை விட திமுக அரசுக்கு எதிராக பேசி அரசியல் ஆதாயம் தேடுவதே குறியாக உள்ளது. பேரிடர் காலத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது அற்பத்தனமான அரசியல்.
The post தமிழ்நாட்டில் பேரிடர் காலத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது அற்பத்தனமான அரசியல்: பாஜ மீது திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.