×

சென்னையில் 26 இடங்களில் கட்டப்பட்டு வரும் 8,723 அடுக்குமாடி குடியிருப்புகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாதோட்டம், ஜமாலியா லேன், மீனாம்பாள் சிவராஜ் நகர் மற்றும் குயில்தோட்டம் திட்டப்பகுதிகளில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்கி வைக்கப்பட்ட ராஜாதோட்டம் திட்டப்பகுதியில் ரூ.27.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 162 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் ரூ. 17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 130 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் மழை வெள்ளத்தால் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் அதிக பணியாளர்களை பணியமர்த்தி, துரிதமாக மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு-மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் ரூ.41.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 240 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும், மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட குயில் தோட்டம் பகுதியில் ரூ.65.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 384 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 26 இடங்களில் கட்டப்பட்டு வரும் 8,723 அடுக்குமாடி குடியிருப்புகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். கட்டுமானத்தின் தரத்தினை மூன்றாம் தரப்பு வல்லுநர் குழுக்களைக் கொண்டு ஆய்வு மேற்கெண்டு அறிக்கை பெற வேண்டும் என வாரிய பொறியாளர்களை அமைச்சர் அறிவுறுத்தினார். இதில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, வாரிய தலைமைப் பொறியாளர் வே.சண்முகசுந்தரம், மேற்பார்வை பொறியாளர்கள்(பொ) இளம்பரிதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

The post சென்னையில் 26 இடங்களில் கட்டப்பட்டு வரும் 8,723 அடுக்குமாடி குடியிருப்புகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Thamo Anparasan ,for Micro, Small and Medium Enterprises Department of Tamil Nadu ,Mo ,Anparasan ,Kolathur Assembly Constituency ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...