×

விருந்தில் நல்லி எலும்பு இல்லாததால் நின்ற திருமணம்: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணை ஜகித்யாலா மாவட்டம் மெட்பள்ளி மண்டலத்தை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்ய பெரியோர்கள் ஏற்பாடு செய்தனர். மணப்பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணை உள்ளிட்டவை குறித்து பேசி முடித்த நிலையில், பெண் வீட்டில் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து கடந்த 23ம் தேதி மணப்பெண் வீட்டில் அசைவ விருந்து வைக்கப்பட்டது. இதற்காக மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் சென்றனர். அப்போது உணவில் மட்டன் நல்லி எலும்பு வேண்டும் என மணமகன் வீட்டு உறவினர்கள் கேட்டனர். இதற்கு எலும்பு இல்லை எனக்கூறவே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மணமகன் உறவினர்களுக்கும், மணமகள் உறவினர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவீட்டாரையும் சமாதானப்படுத்த முயன்று ஏற்கவில்லை. இதையடுத்து இருதரப்பு உறவினர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சமாதானமாக செல்லும்படி ஆலோசனை வழங்கினர். ஆனால் திருமணத்தை நிறுத்திவிடுவதாக மணமகன் வீட்டார் கூறினர். இதையடுத்து மணமகள் வீட்டாரும் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் திருமணத்தை நிறுத்திக்கொண்டு இருதரப்பினர் கலைந்து சென்றனர். மட்டன் நல்லி எலும்பிற்காக ஏற்பட்ட மோதலில் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விருந்தில் நல்லி எலும்பு இல்லாததால் நின்ற திருமணம்: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nalli Bone ,Telangana ,Tirumala ,Nizamabad district ,Medpalli ,Jagityala district ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து