×

ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

மெல்போர்ன்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்துள்ளது. முதல் டெஸ்ட்டில் 360 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாக். பந்துவீச்சை தேர்வு செய்தது.

மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்துள்ளது ( 66 ஓவர்).தனது கடைசி டெஸ்டில் ஆடும் டேவிட் வார்னர் 38 ரன், உஸ்மான் கவாஜா 42 ரன், ஸ்மித் 26 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பாக். தரப்பில் ஹசன் அலி, ஆமெர் ஜமால், ஆஹா சல்மான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். லாபுஷேன் 44 ரன், டிராவிஸ் ஹெட் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ஆஸ்திரேலியா நிதான ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Australia ,Melbourne ,Pakistan ,Dinakaran ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!