×

சேலம் வெங்கடாசலம் கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலத்தில் வெங்கடாசலம் – மல்லிகேஸ்வரி இடையே பொது கிணற்றிலிருந்து சொட்டு நீர் பாசனத்துக்கு நீர் எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. 2015ல் மண்வெட்டி, இரும்புத்தடி, கட்டையுடன் வெங்கடாசலம் நிலத்தில் நுழைந்து குழாய்களை உடைத்ததாக புகார் அளிக்கப்பட்டது. மல்லிகேஸ்வரி தனது குடும்பத்தினருடன் சென்று சொட்டு நீர் பாசன குழாய்களை உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

வெங்கடாசலத்தை மண்வெட்டியால் தலையில் அடித்து, இரும்புத்தடியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட 7 பேருக்கும் 2018ல் சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து 7 பேரும் தொடர்ந்த மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர்மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சாட்சியங்களில் இருந்து குற்றத்துக்கு முழுமையான ஆதாரம் இல்லை என்று கூறி ஆயுள் தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்தது உத்தரவிட்டது.

The post சேலம் வெங்கடாசலம் கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Salem Venkatasalam ,Chennai High Court ,Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணி மையங்களுக்கு...