×

சேமநல நிதியிலிருந்து 39 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ உதவித்தொகை வழங்கினார் சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 39 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகை மொத்தம் ரூ.68,80,201/- வழங்கினார். சந்தீப் ராய் ரத்தோர், காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல், இன்று (26.12.2023), மதியம், வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட (TNPBF) சிறப்பு மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ.68,80,201/-ஐ, ஒதுக்கீடு பெற்ற 39 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களூக்கு நேரில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A. கயல்விழி, காவல் துணை ஆணையாளர்கள் V.R.சீனிவாசன் (நிர்வாகம்), A.மணிவண்ணன், (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சேமநல நிதியிலிருந்து 39 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ உதவித்தொகை வழங்கினார் சென்னை காவல் ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Chennai Commissioner of Police ,Semanala Fund ,Chennai ,Chennai Metropolitan Police ,Commissioner ,Tamil Nadu Police Welfare Fund ,TNPBF ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...