×

பணவீக்கம் அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் ஒரு முட்டை விலை ரூ32


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கோழிப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் ‘சோயாபீன்ஸ்’ வரத்து குறைந்ததால், முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது 30 டஜன் (ஒரு டஜன் என்பது 12 முட்டை) கொண்ட முட்டையின் விலை ரூ.10,500ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்ந்துள்ளது. ஒரு டஜன் முட்டைகளை ரூ.360க்கு விற்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கூறியிருந்தாலும், சில்லரை வியாபாரிகள் ஒரு டஜன் முட்டையை ரூ.389க்கு விற்கின்றனர். அதாவது ஒரு முட்டையின் விலை ரூ.32.40 வரை எட்டியுள்ளது. இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் அரசு சோயாபீன்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. கோழி முட்டை சமீப நாட்களாக அதிகரித்து வருவதால், மக்கள் முட்டை வாங்கி சமைத்து சாப்பிட பயப்படுகிறார்கள். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருகின்றன’ என்றனர்.

The post பணவீக்கம் அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் ஒரு முட்டை விலை ரூ32 appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா