×

நிகரகுவா வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள்: இந்தியர்கள் அதிக அளவில் நுழைவதாக அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தஞ்சமடைய திட்டமிடும் வெளிநாட்டவருக்கு நிகரகுவா ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது. 2023ல் மட்டும் 96,917 இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை 2022ம் ஆண்டை விட 51 புள்ளி 6.1 விழுக்காடு அதிகம்.

இதனை அமெரிக்கா சுங்கம் மற்றும் எல்லை கண்காணிப்பு துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு சட்ட விரோதமாக மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் குடிபுக முயற்சி செய்து பிடிபட்டவர்களில் 41,770 பேர் இந்தியர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குடியேறுவதற்கு வசதியாக நிகரகுவா போன்ற நாடுகள் இயக்கும் விமானங்கள் டன்கி விமானங்கள் என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post நிகரகுவா வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள்: இந்தியர்கள் அதிக அளவில் நுழைவதாக அமெரிக்கா தகவல் appeared first on Dinakaran.

Tags : United States ,Nicaragua ,Indians ,Washington ,Dinakaran ,
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!