×

இறுதி வரை துணிவுடன் நின்று போராட வேண்டும்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவ வீரர்களை சந்தித்து பேச்சு

காசா: தீவிரமான தாக்குதல் நடைபெற்று வரும் வடக்கு காசாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அவருடன் ராணுவ தலைமை தளபதிகளும் சென்றிருந்தனர். ஹமாஸ் படையினரை எதிர்த்து போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மற்றும் தளதிகளுடன் பேசிய அவர்; இறுதி வரை துணிவுடன் நின்று போராடுமாறும், அதற்கு தமது அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

நான் கேட்டுக் கொள்வது எல்லாம் இதேபோல இறுதி வரை நீங்கள் போராட வேண்டும். உங்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். எங்கள் இதயங்கள் உங்களுக்காகத்தான் துடிக்கின்றன. நீங்கள் குடும்பங்களை எல்லாம் விட்டு வந்து போர் செய்கின்றீர்கள். சிலர் உயிரையும் கொடுத்துள்ளீர்கள். நீங்கள்தான் உண்மையான தியாகிகள். என்று அவர் கூறினார். இஸ்ரேல் ராணுவத்தில் வான்வழி தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் 250 பேர் உட்பட இதுவரை 20,700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post இறுதி வரை துணிவுடன் நின்று போராட வேண்டும்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவ வீரர்களை சந்தித்து பேச்சு appeared first on Dinakaran.

Tags : ISRAELI ,BENJAMIN NETANYAHU ,Gaza ,northern Gaza ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும்...