×

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: சாலையில் பொருட்களை எரித்ததால் பதற்றம்

இஸ்ரேல்: இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விற்கு எதிராக மக்களின் போராட்டம் வலுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 250க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களை மீட்க இஸ்ரேல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே ஹமாஸ் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் அவர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஜெருசலேம் பகுதியில் இரவு கூடிய அவர்கள் சாலையில் பொருட்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். சிலர் சாலையை மறித்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டகாரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை காவல் துறையினர் வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் படதரம் நிலவியது.

The post இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: சாலையில் பொருட்களை எரித்ததால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : PM ,Israel ,Benjamin Netanyahu ,Hamas ,Gaza ,Palestine ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!