×

கிறிஸ்துமஸ் விடுமுறை திற்பரப்பு அருவியில் குவிந்த பயணிகள்

குலசேகரம் : குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா ஸ்தலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுவதால் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கும். இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் கூட்டம் இருக்கும். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டத்தால் அலைமோதும். கடந்த 2 மாதங்களாக பெய்த பருவ மழை காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தற்போது கிறிஸ்மஸ் விடுமுறை என்பதால் அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. நேற்று காலை முதல் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதனால் திற்பரப்பு பகுதி முழுவதும் வாகன நெருக்கடியால் திணறியது. பயணிகள் குளிக்கும் பகுதியிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இதே போன்று திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரி செல்லவும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.படகுகளில் திற்பரப்பு தடுப்பணையை சுற்றி வந்து கோதையாற்றின் இயற்கை அழகை பார்த்து மகிழ்ந்தனர். பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த படகோட்டி ஒருவர் படகை ஓட்டி சென்றது பயணிகளை கவர்ந்தது. அவருடன் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post கிறிஸ்துமஸ் விடுமுறை திற்பரப்பு அருவியில் குவிந்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Thilparapa Falls ,Christmas ,Kulasekaram ,Thilparapu ,Kumari district ,Gothaiyar ,Western Ghats ,Tilparapu Falls ,Christmas holiday ,Dinakaran ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...