×

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி அதிமுக தீர்மானம்; இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்..!!

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் கூடியது. பொதுக்குழு மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.

நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அதிமுக தீர்மானம்:

* நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி அதிமுக தீர்மானம் கொண்டுவந்தது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கண்டனம் தெரிவித்தது.

* நாடாளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழு தீர்மானம் கொண்டுவந்தது..

*ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒன்றிய அரசுக்கு அதிமுக வலியுறுத்தியுள்ளது.

*நீட் விலக்கு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

*ஈழத் தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு அதிமுக வலியுறுத்தியுள்ளது.

*பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை-சபாநாயகருக்கு கண்டனம்

*எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரை கண்டித்து அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற மரபுகளை சட்டப்பேரவை தலைவர் கடைபிடிக்கவில்லை எனக் கூறி அதிமுக கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்:

*20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய அதிமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரிக்கை:

*சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என அதிமுக பொதுக்குழு வலியுறுத்தப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற களப்பணியாற்றிட தீர்மானம்:

*மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற களப்பணியாற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி குறித்து தீர்மானம் இல்லை:

*அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட வில்லை. கூட்டணி தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் தற்போது கூறியிருந்தார். நடந்துவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் சிறப்பு தீர்மானங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஜானகி நூற்றாண்டு விழா கொண்டாட அதிமுக தீர்மானம்:

*முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை கொண்டாட அதிமுகபொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சிறப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

அதிமுகவின் வரவு செலவு கணக்கு தாக்கல்:

*அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். அதிமுக மதுரை மாநாட்டிற்கான செலவு 2 கோடியே 24 லட்சம் என கணக்கு விவரம் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக சார்பில் மதுரை நடைபெற்ற மாநாட்டின் மூலம் 2 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் நிதி பெறப்பட்டது. மதுரை மாநாட்டிற்கான செலவைவிட வரவு 1.20 லட்சம் கூடுதலாக வந்திருப்பதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ரூ.261.80 கோடி மொத்த தொகை இருப்பதாக அதிமுக வரவு செலவு கணக்கில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி அதிமுக தீர்மானம்; இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : EU ,Chennai ,Executive Committee ,General Committee ,Chennai Wanakaram ,Parliament ,
× RELATED நாய்களை வகைப்படுத்துவது பற்றி முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!!