×

ஒடிசா முன்னாள் ஆளுநர் மறைவு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மறைந்த ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், காமராஜர், கலைஞர் உள்ளிட்ட முதல்வர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஒடிசா முன்னாள் ஆளுநர் மறைவு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Odisha ,governor ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Rajendran ,
× RELATED ஒடிசா மாநில பாஜக து.தலைவர் ராஜினாமா