×

மக்கள் அவதிப்படும் மோடியின் பேரிடர் ஆட்சி அகற்றப்பட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கீழ்வேளூர்: மக்கள் அவதிப்படும் மோடியின் பேரிடர் ஆட்சி அகற்ற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழ வெண்மணியில் 55ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஒன்றிய பாஜ அரசு மிக மோசமான வெறுப்பு அரசியலை சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும், ஒரு மோதலை உருவாக்கி மதக்கலவர நாடாக இந்தியாவை மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஒரு மத வெறியை அடிப்படையாக வைத்து இந்தியாவின் ஒற்றுமையை, உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை சீரழித்து ஒரு மதவெறி பிடித்த ஆட்சியை மோடி அரசு நடத்தி வருகிறது. ஒரு பேரிடர் ஏற்பட்டால் எப்படி மக்கள் அவதிப்படுகிறார்களோ அப்படிப்பட்ட பேரிடர் ஆட்சியாக மோடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.

இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். தென்மாவட்டங்களில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. 2 நாளில் இயல்பு நிலை திரும்பும் வகையில் நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாட்டை சேர்ந்த ஒன்றிய நிதியமைச்சர், தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார். 1923-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது 96 செ.மீ. மழை பெய்கிறது. இதை முன்கூட்டியே சொல்லும் அளவிற்கு வானிலை ஆய்வு மையத்தின் தொழில் நுட்பம் இல்லையா, அல்லது அந்த அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவில்லையா?.இவ்வாறு அவர் கூறினார்.

* மோடி அரசை கண்டித்து ஜன.3ம் தேதி போராட்டம்
கே.பாலாகிருஷ்ணன் கூறுகையில், ‘ஒன்றிய அரசு வழங்கிய ரூ.450 கோடி ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழங்கும் தொகை. அது நிரந்தரமான கட்டமைப்புகளை வழங்க அளிக்கப்படும் தொகை. அதில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து நிவாரணம் வழங்க முடியாது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிவாரணமாக ஒரு ரூபாய் கூட நிதி வழங்காமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது. பேரிடர் நிதி ஒரு ரூபாய் கூட வழங்காத மோடி அரசை கண்டித்து வரும் ஜனவரி 3ம் தேதி சென்னையில் சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு மா.கம்யூ. சார்பில் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

The post மக்கள் அவதிப்படும் மோடியின் பேரிடர் ஆட்சி அகற்றப்பட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,K. Balakrishnan ,Nagai district ,Kilvellur ,
× RELATED அதிமுகவினர் திமுகவுக்கே வாக்களித்துள்ளனர் : சிபிஎம்