×

தூத்துக்குடி மாவட்டத்தில் 82% செல்போன் டவர்கள் சீரமைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தமிழ்நாடு பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் தமிழ்மணி அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பிஎஸ்என்எல் செல்போன் டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அதனை மீட்கும் பணிகளில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், கடந்த ஒரு வாரமாக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மழை காரணமாக பேட்டரி, ஜெனரேட்டர் உள்ளிட்ட பல இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக நெல்லை, நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் இணைந்து தொலைதொடர்பு சேவையை சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 399 செல்போன் டவர்கள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டன. இதனை விரைவாக சரி செய்துள்ளோம். தற்போது 82 சதவீதம் வரை சரி செய்யப்பட்டு சேவை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 69 செல்போன் டவர்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனை சரி செய்வதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீரில் மூழ்கிய இயந்திரங்களுக்கு மாற்றாக புதிய இயந்திரங்கள் திருவனந்தபுரம் நெடுமங்குளம், பெங்களூரு, மதுரை, திருச்சி, வேலூர், சென்னை, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் 82% செல்போன் டவர்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin district ,Thoothukudi ,Tamilnadu BSNL ,Chief General Manager ,Tamilmani ,Thoothukudi district ,BSNL ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய...