×

முந்தைய காங். அரசின் அனைத்து திட்டங்களும் தொடரும்: ராஜஸ்தான் பாஜ முதல்வர் உறுதி

ஜெய்ப்பூர்: முந்தைய அரசின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என ராஜஸ்தான் பாஜ முதல்வர் பஜன்லால் சர்மா உறுதியளித்துள்ளார். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த வாஜ்பாய் பிறந்த தின விழாவில், புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பஜன்லால் சர்மா பேசுகையில்,‘‘பாஜ ஆட்சிக்கு வந்துள்ளதால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்க்கப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரசார் கூறி வருகின்றனர்.முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்படாது. அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படும். அத்தியாவசிய மருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் ’’ என்றார்.

The post முந்தைய காங். அரசின் அனைத்து திட்டங்களும் தொடரும்: ராஜஸ்தான் பாஜ முதல்வர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Rajasthan BJP ,CM ,Jaipur ,Chief Minister ,Bhajanlal Sharma ,Jaipur… ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு..!!