ஜெனீவா: விளையாட்டுச் சங்கங்களின் விவகாரங்களில் அந்தந்தந்த நாட்டு அரசுகள், நீதிமன்றங்கள் தலையிடுவதை சர்வதேச கூட்டமைப்புகள் விரும்புவதில்லை. அப்படி மீறினால் அந்த நாடுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விக்கப்படும். சில நேரங்களில் ஒலிம்பிக் உள்ள சர்வதேச போட்டிகளில் தடை செய்யப்பட்ட நாட்டின் கொடிக்கு பதிலாக ஒலிம்பிக் கொடியை பயன்படுத்தி நடுநிலை வீரர்களாக பங்கற்க அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ‘ஃபிபா’ போன்ற அமைப்புகள் சம்பந்தபட்ட நாட்டில் உள்ள சங்கத்துக்கு தடை விதிப்பதுடன், அந்த நாடு போட்டியில் பங்கேற்கவும் தடை விதித்து விடும்.
ரஷ்யா 2 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது தடை விதித்தால் 2022ல் நடந்த உலக கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றிப்பெற்ற தலைவர் எட்னால்டோ ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை உள்ளூர் நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியது. அதனை உறுதி செய்த பிரேசில் உச்ச நீதிமன்றம், நியாயமாக தேர்தலை 30 நாட்களில் நடத்த பொறுப்பாளரை நியமித்து உத்தரவிட்டது. அதற்கு ஃபிபா, ‘கூட்டமைப்பு விவகாரங்களில் தலையிட்டு புதிதாக தேர்தல் நடத்தினால், பிரேசில் கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் மூலம் பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளிலும், 2026ம் ஆண்டு உலக கோப்பையிலும் பிரேசில் அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த 22 உலக கோப்பையிலும் விளையாடிய ஒரே அணி பிரேசில் மட்டுமே என்ற வரலாறு உள்ளது. விளையாட்டுச் சங்கங்களால் விளையாட்டு வீரர்கள் பாதிப்பது தொடர்கதையாகி வருகின்றன. இதுதோல் உலக கோப்பையில் மோசமான தோல்வியை இலங்கை சந்தத்து. அதனால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தை, இலங்கை அரசு கலைத்து விட்டது. எனவே அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி தடை விதித்து விட்டது. அதனால் அந்த நாடு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதே நேரத்தில் பிசிசிஐ விவகாரத்தில் நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலையிட்டு, நிர்வாகத்தை கலைத்து விட்டு முன்னாள் நீதிபதி லோத்தா தலைமையில் சுமார் 3 ஆண்டுகள் பிசிசிஐயை நிர்வாகம் செய்தது.
The post சர்வதேச போட்டிகளில் ஆட முடியாது appeared first on Dinakaran.