×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது.

புதிய பஸ்நிலைய பணி திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய பஸ்நிலைய பணி வேகமாக நடந்து வருகின்றன. தினசரி 1.5 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

பஸ் நிலைய பணிகள் முழுவதும் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும். பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் .

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படும், 840 ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மருந்து கடைகள், ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை வண்டிகள் நிறுத்தப்படும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தனி காவல்நிலையம் செயல்படும்:” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Klampakkam ,Bus Station ,Pongal ,Minister ,Sekarbabu ,Chennai ,Chief Minister MLA ,Klambakkam bus station ,K. Stalin ,Klampakkam Bus Station ,Sekarbhabu ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்