×

போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

 

திருவொற்றியூர், டிச.25: திருவொற்றியூர், அரிமா சங்கங்களின் சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று எண்ணூர் விரைவு சாலை, சுங்கசாவடி சந்திப்பில் நடந்தது. இதில், வயதிற்கு ஏற்றாற்போல், 3, 5, 10 கி.மீ., என்ற அளவில், மூன்று பிரிவுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்காக, எண்ணுார் விரைவு சாலை முழுவதும், போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

எண்ணூர் விரைவு சாலை சுங்கசாவடி சந்திப்பில் துவங்கிய மாரத்தான் போட்டி, பாரதியார் நகர் சந்திப்பு வரை சென்று, மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தது. நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் பஜேந்திரபாபு, ரவிசந்திரன், மணி சேகர், சங்கர், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, வெற்றிப் பெற்றவர்களுக்கு, பரிசு, கேடயங்கள் பங்கேற்றவர்களுக்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

The post போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Drug Awareness Marathon ,Tiruvotiyur ,Arima Associations ,Drug Awareness Marathon Competition ,Ennore Expressway ,
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...