×

தெற்கு காசாவில் போர் தீவிரம் இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் 2 நாளில் பலி: ஹமாஸ் கடும் பதிலடி

டெல் அவிவ்: தெற்கு மற்றும் மத்திய காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹமாசின் பதில் தாக்குதலில் கடந்த 2 நாளில் 14 வீரர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.வடக்கு காசாவை முற்றிலும் நாசமாக்கிய நிலையில் இஸ்ரேல் ராணுவம் தற்போது மத்திய மற்றும் தெற்கு காசாவில் போரை தீவிரப்படுத்தி உள்ளது. அதேசமயம், அங்கு ஹமாஸ் படையினரும் பதுங்கியிருந்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்னர். இதற்கிடையே கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் ஹமாசின் தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இறந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ராணுவம், தரைவழி தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 152 வீரர்களை போரில் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பலியான 14 வீரர்கள் 4 பேர் ஏவுகணை தாக்குதலிலும் மற்றவர்கள் துப்பாக்கி சண்டையிலும் இறந்துள்ளனர். ஹமாசின் இந்த தீவிரமான தாக்குதலுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இப்போரில் இதுவரை 20,258 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்னும் 129 பிணைக் கைதிகள் ஹமாஸ் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

The post தெற்கு காசாவில் போர் தீவிரம் இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் 2 நாளில் பலி: ஹமாஸ் கடும் பதிலடி appeared first on Dinakaran.

Tags : southern Gaza ,Hamas ,Tel Aviv ,southern ,central Gaza ,
× RELATED இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல்