×

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கபட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கபட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
“தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானியுடனும், மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.

The post கனமழை, வெள்ளத்தால் பாதிக்கபட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Gold South Rassu ,Thoothukudi district ,Chennai ,South Tamil Nadu ,Thoothukudi ,Gold South Rashu ,Tuthukudi district ,Dinakaran ,
× RELATED கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும்...