×

உள்ளூர் மக்கள் மீது தாக்குதல்கள்; ராணுவம் உஷாராக இருக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் பேட்டி

ஜம்மு: உள்ளூர் மக்கள் மீது தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், இவ்விசயத்தில் ராணுவம் உஷாராக இருக்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச்-ரஜோரி செக்டார் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முனம் ராணுவ வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து உள்ளூர்வாசிகள் மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ரஜோரி-பூஞ்ச் செக்டார் பகுதியில் 25 முதல் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். உள்ளூர்வாசிகள் 3 பேர் கொல்லப்பட்டதால், பல்வேறு கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘உள்ளூர்வாசிகள் கொல்லப்படும் விசயத்தில் ராணுவம் உஷாராக இருக்க வேண்டும். ஒன்றியய மற்றும் மாநில அரசுகள் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் தகவல்களை சேகரிக்க வசதியாக, உள்ளூர் மக்களையும் ராணுவம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாத தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி முகமது ஷாபி என்பவர் இன்று அதிகாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பாரமுல்லாவில் உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்ட போது கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

The post உள்ளூர் மக்கள் மீது தாக்குதல்கள்; ராணுவம் உஷாராக இருக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Gulam ,Prophet ,Assad ,Jammu ,Ghulam Prophet ,Asad ,
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...