×

ஓய்வூதியர் தின விழா

ஊட்டி, டிச.24: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சார்பில் ஊட்டியில் ஓய்வூதியர் தின விழா நடந்தது. ஊட்டியில் உள்ள ஓய்எம்சிஏ அரங்கில் நடந்த விழாவிற்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க தலைவர் காந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ரவி வரவேற்றார். துணைத்தலைவர் பூவன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணை தலைவர்கள் ராஜன், குமாரசாமி மற்றும் பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாவட்ட செயலாளர் பழனியப்பா, மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன், இணை செயலாளர் ராமந்திரன் ஆகியோர் விழா பேரூரையாற்றினர். இவ்விழாவில், பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில், நீலகிரி மாவட்டத்தை சேரந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஓய்வூதியர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Pensioner's Day ,Ooty ,OMCA ,Ooty… ,Pensioners Day ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...