×

இன்ஜினியர் வீட்டில் நகை திருட்டு

கோவை, டிச. 24: கோவை ஆவாரம்பாளையம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (33). இன்ஜினியர். இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 23 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது.

இது குறித்து பீளமேடு போலீசில் நவீன்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post இன்ஜினியர் வீட்டில் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Goa ,Naveen Kumar ,Krishnarayapuram ,Avarampalayam ,
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...