×

சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கினார்

புழல்: சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுதர்சனம் வழங்கினார். சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகம் மற்றும் பி.டி. மூர்த்தி நகர் பாடியநல்லூர் திமுக ஒன்றிய அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் நேற்று நடைபெற்றது. சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றிய குழு துணை தலைவரமான கருணாகரன் தலைமை தாங்கினார்.

சென்னை வடகிழக்கு திமுக மாவட்ட செயலாளரும் மாதவரம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு 400 மகளிர் மற்றும் 30 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட 700 பேருக்கு அரிசி மூட்டைகள் மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் காசிம் முகமது, துரைவேல், சீனிவாசன் வீரம்மாள் விஜயன், பூதூர் சேகர், பொன் கோதண்டம் உள்பட மாவட்டம், ஒன்றியம் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

The post சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Cholavaram South Union DMK ,MLA ,Puzhal ,Sudarsanam ,Cholavaram South ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்