×

ம.பி.யில் பாஜ ஆட்சி 6 ஆண்டுக்கு பின் காலணி அணிந்த பாஜ நிர்வாகி

போபால்: மத்தியப்பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்ட பாஜ தலைவர் ராம்தாஸ் புரி. மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைக்கும் வரை செருப்பு, ஷூ அணிந்து கொள்ளமாட்டேன் என்று கடந்த 2017ம் ஆண்டு சவால் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து செருப்பு மற்றும் ஷூ அணிவதையும் அவர் தவிர்த்துவிட்டார். மழை, வெயில் என எந்த காலத்திலும் அவர் செருப்பு அணியாமல் இருந்து வந்தார். 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜ தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜ ஆட்சி அமைத்தது.

ஆனாலும் ராம்தாஸ் புரி செருப்பு அணியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து பாஜ தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் செருப்பு அணிந்து கொள்ளும்படி அவரை வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து 6 ஆண்டு இடைவெளிக்கு பின், நேற்று முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னிலையில் அவர் செருப்பு அணிந்து கொண்டார்.

The post ம.பி.யில் பாஜ ஆட்சி 6 ஆண்டுக்கு பின் காலணி அணிந்த பாஜ நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : BJP ,Bhopal ,Ramdas Puri ,Madhya Pradesh ,Paddur district ,BJP government ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150...