×

கனமழை வெள்ளத்தால் 315 மருத்துவமனைகள் சேதம்: அமைச்சர் பேட்டி

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீர் புகுந்த இடங்களை சபாநாயகர் அப்பாவு தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கனமழையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதய சிகிச்சை பிரிவுக்கான கேத்லேப் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதை சரி செய்ய முடியுமா என தொழில்நுட்ப பணியாளர்களை வரவழைத்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களிலும் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 261 துணை சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1021 மருத்துவர்களுக்கு 15 நாட்களில் முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்குவார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post கனமழை வெள்ளத்தால் 315 மருத்துவமனைகள் சேதம்: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Health Minister ,M. Subramanian ,Nellai Government Medical College Hospital ,Speaker ,Appavu ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...