×

சித்தாமூர் ஒன்றியத்தில்‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ நிகழ்ச்சி: 7 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன

செய்யூர்: சித்தாமூர் ஒன்றியத்தில் `நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 7,000க்கும் மேற்பட்ட மனுக்களை காஞ்சிபுரம் எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோர் பெற்றனர்.“நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ” என்ற தலைப்பில் கிராம பொதுமக்களிடம் பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறுவதற்கான கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு பட்டா வழங்குவதற்கு மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடைபெற்றது. சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள பொறையூர், இரும்புலி, போரூர், நுகம்பல், பெரிய கலக்காடி, சிறுநகர், புத்திரன் கோட்டை, அகரம், வன்னிய நல்லூர், ஈசூர், மாம்பாக்கம், சிறுமையிலூர், நெற்குணம், புளியணி, 23கொளத்தூர், அம்மணம்பாக்கம், தேனம்பாக்கம், அறப்பேய்டு உள்ளிட்ட 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காலை முதல் மாலை வரை 7,000க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.

நிகழ்ச்சிகளுக்கு, கோட்டாட்சியர் தியாகராஜன், தாசில்தார் சரவணன், வேளாண்மை துறை இணை இயக்குநர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம் முகாம்களில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர்பாபு ஆகியோர் கோரிக்கை மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் மோகன்தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல் குமார், தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆதவன், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் நாகப்பன், குமுதா மதுரை, முரளி, பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் வினோத், வடிவேல், குமுதா துரைராஜ், முரளி, ரமணி ராமணையா, லட்சுமி, தமிழரசி ராமலிங்கம், மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சித்தாமூர் ஒன்றியத்தில்‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ நிகழ்ச்சி: 7 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Selvam ,Chittamur Union ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...