×

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை வேதனை

மதுரை: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் திருச்சுழி சேதுபுரத்தைச் சேர்ந்த சி.பாண்டியராஜன் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில்; ஊரில் 300 குடும்பங்களில் 120 குடும்பங்கள் பட்டியல் வகுப்பினர், பட்டியலின மக்களை கோயில் விழாவில் அனுமதிப்பதில்லை. செல்லியாரம்மன் கோயில் திருவிழாவில் பட்டியல் பிரிவு மக்களிடம் வரி வசூலிப்பதில்லை என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது. எந்த ஒரு தனி நபரையும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதக் கடமைகளை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. சேதுபுரத்தில் தீண்டாமை கொடுமை உள்ளதா? வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வருவாய்த்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை வேதனை appeared first on Dinakaran.

Tags : Aikord ,Madurai ,Aycourt ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளிடம் வெளிநாடு...