×

மார்கழி விழாவில் மங்கையர்க்கரசி சொற்பொழிவு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார்

 

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆதம்பாக்கம் இசை மன்றம் கல்சுரல் டிரஸ்ட் ஆகியவை இணைந்து, ஆதம்பாக்கத்தில் உள்ள லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நேற்று முதல் 4 நாள் மார்கழி திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கியது. ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.செல்வகுமார், வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன். சங்க செயலாளர் ஜெ.சத்யன், பொருளாளர் எஸ்.முத்து, இசை மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வர்ணனையாளர் ராதா ஜெயலட்சமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி 4 நாள் மார்கழி திருவிழா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் பரதநாட்டியம், பக்தி பாடல் நிகழ்ச்சிகளுடன் மார்கழி திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. திருமுருக கிருபானந்த வாரியாரின் மாணவி கலைமாமணி தேச.மங்கையற்கரசி பங்கேற்று, காரைக்கால் அம்மையாரின் வாம்க்கை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், திமுக பகுதி செயலாளர் பி.குணாளன், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துனண தலைவர் சுதா நாஞ்சில் பிரசாத், ஆலந்தூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.கணேசன், ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஈகிள் என்.தங்கவேல், டாக்டர் ஜெயக்குமார், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ நடராஜன், வேலவன். கே.ஆர்.ஆனந்தன், ஆதம் பிரகாஷ், நேரு ரோஜா, சந்தானம், நலச்சங்கம் சார்பில் தமிழ்செல்வி. மூர்த்தி, சரவணன், விஜய்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மார்கழி விழாவில் மங்கையர்க்கரசி சொற்பொழிவு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார் appeared first on Dinakaran.

Tags : Mangaikarasi ,Marghazhi Festival ,Minister ,Mo. Anbarasan ,Alandur ,Adambakkam Dealers Association ,Adambakkam Music Forum Cultural Trust ,Marghazi Festival ,Tha. Mo. Anbarasan ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...