×

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு..!!

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும், விமான நிறுவனங்களும் தங்களின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் சொந்த ஊர் செல்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

குறிப்பாக, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், வெளியூர்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் ஏற்கனவே அரசு பஸ்கள், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், அரசு பஸ்களில் டிக்கெட் இல்லாதவர்கள் ஆம்னி பஸ்களை நாடுகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்லும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் – ரூ. 3,700, தற்போது ரூ.4,100 வரை வசூலிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Omni ,Christmas holidays ,CHENNAI ,Christmas ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து