×

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4.84 லட்சம் டன் உணவு தானிய பயிர் உற்பத்தி இலக்கு

*மயிலாடுதுறை கலெக்டர் தகவல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.அப்போது அவர் தெரிவித்ததாவது:மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானிய பயிர்களின் உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் மெ.டன்களாக பெறப்பட்டுள்ளது. இதில் நெல் பயிரில் 1,12,794 ஏக்கர் பரப்பும், உற்பத்தி இலக்காக 4.47 லட்சம் மெட்ரிக் டன் இலக்கும் மற்றும் உற்பத்தி திறன் இலக்காக 3969 (அரிசி) கிலோ கிராம், எக்டர் பெறப்பட்டுள்ளது.

மேலும், சிறுதானிய பயிர்கள் சாகுபடி இலக்காக 50 எக்டரும். உற்பத்தி இலக்காக 32 மெ.டன்களும் உற்பத்தி திறன் இலக்காக ஒரு எக்டருக்கு 800 கிலோவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயறுவகை பயிர்களுக்கு 52,000 எக்டர் சாகுபடி பரப்பும், 36,550 மெ.டன் உற்பத்தி இலக்கும் மற்றும் உற்பத்தி திறன் இலக்காக எக்டருக்கு 703 கிலோவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பயிர்களான எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு 1950 எக்டர் சாகுபடி இலக்கும், 5668 மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கும்.

2907 கிலோ, எக்டர் உற்பத்தி திறன் இலக்கும் பெறப்பட்டுள்ளது. பருத்தி பயிர் சாகுபடி பரப்பு இலக்காக 5250 எக்டரும், உற்பத்தி இலக்காக 0.177 இலட்சம் பேல்கள் பருத்தி பஞ்சும் மற்றும் உற்பத்தி திறன் இலக்காக ஒரு எக்டருக்கு 572 கிலோ பருத்தி பஞ்சும் இலக்காக பெறப்பட்டுள்ளது. மேலும், கரும்பு பயிரின் சாகுபடி இலக்காக 400 எக்டரும் உற்பத்தி இலக்காக 0.456 லட்சம் மெ.டன்னும் உற்பத்தி திறன் இலக்காக ஒரு ஏக்கருக்கு 114 மெ.டன்னும் பெறப்பட்டுள்ளது.

குறுவை பருவத்தில் 37940 எக்டர் இலக்காக பெறப்பட்டு 38441.13 எக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6632.995 எக்டர் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 5446.59 எக்டர் பரப்பில் சாதா நடவு முறையிலும் மற்றும் 26361.53 எக்டர் திருந்திய நெல் சாகுபடி முறையிலும் ஆக கூடுதலாக 38441.13 எக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 38441.13 எக்டர் பரப்பில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன. நடப்பு சம்பா/தாளடி பருவ சாகுபடி இலக்காக 74341 எக்டர் பெறப்பட்டுள்ளது. இதில் சம்பா சாகுபடி பரப்பு இலக்காக 36401 எக்டரும் மற்றும் தாளடி பருவ சாகுபடி இலக்காக 37940 எக்டரும் இலக்காக பெறப்பட்டுள்ளது.

இதில் தற்போது வரை26038.436 எக்டரில் நேரடி விதைப்பும் 8643.848 எக்டரில் சாதா நடவும் மற்றும் 34307.007 எக்டரில் திருந்திய சாகுபடி பரப்பளவு ஆக கூடுதலாக 68989.291 எக்டர் பரப்பில் சம்பா/தாளடி பருவத்தில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு நீண்டகால மற்றும் மத்திய கால நெல் ரக விதைகளான ஆடுதுறை 51. சி.ஆர். 1009 சப்-1. டி.கே.எம்.13 ஆகிய விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.17.50 மானியமும் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை விவசாயிகளுக்கு 910 மெ.டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் 1950 மெ.டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ மணிமேகலை, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் வேளாண்மை ஜெயபால் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் 4.84 லட்சம் டன் உணவு தானிய பயிர் உற்பத்தி இலக்கு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai district ,Mayiladuthurai ,District Collector Mahabharathi ,
× RELATED மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு...